×

மண்டகப்பட்டு- பாக்கம் கூட்ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி சாலை விரிவாக்கம்

திருபுவனை : கண்டமங்கலம் அடுத்த மிட்டா மண்டகப்பட்டு பாக்கம் கூட்ரோடு சாலை விரிவாக்கம் 7  மாதங்களாக நடைபெற்று வந்தது இதில் அங்கு பல்வேறு கடைகள் வைத்து  வியாபாரம் செய்துவந்தனர். அங்குள்ள வியாபாரிகளை சாலை விரிவாக்கம் காரணமாக முதல்கட்ட நடவடிக்கையாக அவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பி காலி செய்யுமாறு கூறப்பட்டது. ஆனால் அவர்கள் இதுவரை காலி செய்யாமல்  கடையை நடத்தி வந்தனர். மேலும் 2ம் கட்டமாக அவர்களுக்கு கடையை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல் அப்பகுதி வியாபாரிகள் கடையை நடத்தி வந்தனர். இதையடுத்து, அங்குள்ள கடைகளை அப்புறப்படுத்த நெடுஞ்சாலை துறை மூலம் பெொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. இதை அறிந்த வியாபாரிகள், எங்களுக்கு காலஅவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது சம்பந்தமாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழுப்புரம் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வட்டாட்சியர் வெங்கட சுப்பிரமணி தலைமையில் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் லெனின், உதவி ஆய்வாளர் அனிதா ஆகியோர் முன்னிலையில் கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, எஸ்ஐ பிரபு ஆகியோரின் துணையுடன் பாக்கம் கூட்டு ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் நேற்று அகற்றப்பட்டன….

The post மண்டகப்பட்டு- பாக்கம் கூட்ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி சாலை விரிவாக்கம் appeared first on Dinakaran.

Tags : Gudrot ,Zanagadi- Pakkam Goedrot ,Kandamangalam ,Mita Mandalam ,Pakkku Goodroad ,Pakkum Goodrote ,
× RELATED வில்லியனூர் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் அடித்து கொலை